செய்திக் குறிப்பு

இலȨக໾யில் பாலியல் வன்முறையைத் தடுப்பது தொடர்பாக வெளியுறவுத்துறைச் செயலரின் உரை

பாலியல் வன்முறையை தடுப்பது தொடர்பாக வெளியுறவுத்துறைச் செயலர் உரையொன்றை ஆற்றியதுடன் குற்றவிலக்களிப்புக் கலாச்சாரத்தை முடிவுறுத்துவதற்கும் இலȨக໾யை வேண்டிக் கொண்டார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
The Foreign Secretary William Hague

நாட்டில் பாலியல் வன்முறைக் கலாச்சாரத்தை முடிவுறுத்துவதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடுவதற்கு இலȨக໾யிலுள்ள சிவில் சமூகக் குழுக்களை வெளியுறவுத்துறைச் செயலர் இன்று சந்தித்தார். இந்தக் கொடுமையான துஷ்பிரயோகம் உலகளவில் ஏன் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இலȨக໾ உட்பட பொதுநலவாயாயத்தின் உறுப்பினர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பை ஏன் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய உரையொன்றையும் அவர் ஆற்றினார்.

மோதல்களின் போதும் மற்றும் பின்னரும் காவலிலுள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சித்திரவதை செய்யும் ஒரு வழிமுறையாக உட்பட, யுத்தத்தின் போதும் மற்றும் பின்னரும் இலȨக໾ பாதுகாப்பு படைகளால் புரியப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் கூறியுள்ளன. இலȨக໾யில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களும் நாடு முழுவதிலுமாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கணிசமான பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் வன்முறைகள் பற்றிப் பேசினர்.

மோதல் முன்னெடுப்புகளில் பாலியல் வன்முறைளைத் தடுத்தல் என்பதன் மூலமாக மோதல்களின் போது பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களின் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வெளியுறவுத்துறைச் செயலர் முன்னெடுக்கிறார். மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுறுத்துவதற்கான பற்றுறுதியின் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட 134 நாடுகளுடன் இணைந்து கொள்வதற்கு இலȨக໾ அரசாங்கத்தையும், மற்றும் ஏனைய பொதுநலவாய நாடுகளையும் ஐக்கிய இராச்சியம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. சிவில் சமூகக் குழுக்கள், இலȨக໾ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் ஊடகவியலாளர்ளைக் கொண்ட ஒரு பார்வையாளர் சபையில் வெளியுறவுத்துறைச் செயலர் தனது உரையை ஆற்றினார்.

வெளியுறவுத்துறைச் செயலர் தெரிவித்தது:

“பாலியல் வன்முறை பாதிப்புகளைக் கையாளுதல், குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருதல், மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை கௌரவத்துடன் மீளக்கட்டி எழுப்புவதற்கு உதவுதல் என்பன உலகம் முழுவதிலுமான மோதல்களின் பிந்திய நிலைமைகளாக உள்ளதினால், அவை இங்கே, இலȨக໾யில் நல்லிணக்கம் மற்றும் நீண்ட கால ஸ்திரத்தன்மை என்பவற்றுக்கு முற்றிலும் முக்கியமானவையாகும்.

“2009 இல் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து முன்னேற்றங்கள் அங்கே ஏற்பட்டுள்ளன, அவற்றை நாம் வரவேற்கிறோம்: மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள், உட்கட்டுமான வசதிகள் மீளக் கட்டியமைக்கப்பட்டுள்ளன, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன, மாகாணசபைத் தேர்தல்கள் வடக்கில் நடாத்தப்பட்டுள்ளது, மற்றும் முன்னாள் போராளிகள் பலர் இலȨக໾ச் சமுதாயத்தினுள் மீள ஒருங்கிணைக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் ஏனைய பகுதிகள், மற்றும் உலகம் என்பவற்றிடமிருந்து முன்னர் துண்டிக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, இப்பொழுது அவற்றுடன் மீள இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்காக எவருமே நிறுத்தப்படவில்லை.

“மோதல்களின் இறுதிக் கட்டங்களின் போதும் மற்றும் அதற்கு முன்னதாகவும் அரசாங்கப் படைகளால் பாலியல் வல்லுறவு உபயோகிக்கப்பட்டது எனும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவின் அறிக்கைகள்; குற்ற ஒப்புதல்களைப் பெறுவதற்காக பாலியல் ரீதியான சித்திரவதை உபயோகிப்பட்டது எனும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கள்; மற்றும் குறிப்பாக 90,000 அளவிலான யுத்த விதவைகள் வசிக்கும் பகுதிகளில் ஒரு பாரியளவிலான இராணுவப் பிரசன்னத்தோடு, பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆளாகக்கூடிய ஏதுநிலை தொடர்பான தொடர்ச்சியான கரிசனைகள் என்பவற்றை குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கியிருந்தன.

“இவை விசாரிக்கப்படுவதற்கு தகுதியானவை என்பதால், இந்தச் சம்பவங்கள் புலன்விசாரிக்கப் படுவதற்கு இலȨக໾ அரசாங்கத்தை நான் வலியுறுத்துவேன். அதாவது, நம்பகத்தன்மையான மற்றும் சுயாதீனமான புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்படுதலை அது அர்த்தப்படுத்துகிறது, ஆனால், பாதிப்படைந்தவர்களுக்கு கூடுதலான உதவி அளித்தல் மற்றும் சமூகக் கறை மற்றும் அச்சுறுத்தல்கள் என்பவற்றால் நீதி பாதிப்டையாதிருப்பதற்கு, வலுவான சாட்சிகள் பாதுகாப்புச் சட்டவாக்கங்களை நிறைவேற்றுதல் என்பவற்றையும் கூட அது அர்த்தப்படுத்துகிறது.

“மோதல்களில் இரு தரப்புகளாலும் புரியப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றின் குற்றச் சாட்டுக்களில் ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகத்தனமையான புலன்விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து, பிரித்தானிய அரசாங்கமும் தொடர்ச்சியாக கோரி வந்துள்ளது. ஒரு சுயாதீனமான புலன்விசாரணை இல்லாத தன்மையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து உட்பட ஒரு சர்வதேச புலன்விசாரணைக்காக அழுத்தம் அதிகரிக்கும்.

“எங்களால் முடிந்த வகையில் பல வழிகளிலும் இலȨக໾க்கு நாம் உதவுவதற்கு விரும்புகிறோம். உள்நாட்டில் துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிகரித்த பொலிஸ் பாகாப்பு, மற்றும் புலன்விசாரித்தல் தொழில்நுட்பங்களில் உள்ளூர் ஊடகங்களுக்கு பயிற்சியளித்தல் என்பன இந்த விடயங்களில் ஒரு வெளிச்சத்தை காண்பிப்பதற்கு அவர்களுக்கு உதவும். ஆனால், இந்த உதவிகளை பரந்துபடுத்துவதற்கும் மற்றும் எங்களது ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.அத்துடன் உலகளவில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான எங்களது சர்வதேசப் பிரச்சாரத்தில் இலȨக໾ இணைந்து கொள்வதைக் காண்பதற்கும் நாம் ஆவலாக உள்ளோம், அது உலகளவிலான முன்னேற்றத்தை ஊக்குவிப்புச் செய்யும்.”

Updates to this page

வெளியிடப்பட்ட தேதி 13 நவம்பர் 2013